சிற்ப சாஸ்திரம்
மயமதம் , காஸ்யபம் , மானசாரம் போன்ற நூல்கள் கோயில் கட்டடக்கலையை பற்றி விரிவாக பேசுகின்றன . கோயில் கட்டத் தேர்வு செய்யப்பெறும் நிலத்தில் தொடங்கிக் கட்டுமானம் நிறைவு பெறும்வரை உள்ள அம்சங்களையும் விளக்குகின்றன . கட்டுமான தொடக்கத்திலிருந்து பின்பு நித்ய நித்திய வழிபாடுவரை கடை பிடிக்க வேண்டிய விதி முறைகள் அனைத்தையும் கீழ்காணும் பட்டியலில் உள்ள இருபத்தெட்டு சைவாகமங்களும் அவற்றின் உபாகமங்களும் தெளிவாக விளக்குகின்றன.
சிவாகமங்கள்
1.காமிகம் ,2. சஹஸ்ரம் 3. வீரம் , 4.லலிதம் ,5. யோகஜம் 6.அம்சுமான் , 7. ரௌரவம் , 8. சித்தம் , 9.சிந்தியம், 10. சுப்ரபேதம், 11. மகுடம், 12.சந்தானம்,
13.காரணம், 14.விஜயம்,15, விமலம், 16.சர்வம், 17.அஜிதம், 18.நிச்வாசம் ,
19. சந்திர ஞானம் 20.பாரமேஸ்வரம் .21 தீப்தம், 22.ஸ்வாயம்புவம்,
23.பிம்பம், 24.கிரணம், 25.சூக்ஷ்மம், 26.அனலம், 27.ப்ரொத்கீதம் 28.வாதுளம் .
"ஈஸ்வர சம்ஹிதை " 24 வது அத்தியாயங்களில் 16 அத்தியாயங்கள் இந்த விதிகளை பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளன . "ஹயசீர்ஷ சம்ஹிதையில்" முதல் காண்டமே பிரதிஷ்டா காண்டம். இது 42 பிரிவுகளை கொண்டது. " பௌஷ்காரணசம்ஹிதை" யின் முக்கியமான பகுதி மூர்த்தி வழிபாட்டினைப் பற்றியே உள்ளது.
ஆலய நிர்மாணத்தில் முக்கியமான ஐந்து வகைகள் உண்டு .
1. சதுரஸ்ரம்
2. ஆயதாஸ்ரம்
3. வ்ருத்தாயதம்
4. வ்ருத்தம்
5.அஸ்ட்டாச்ரம்
இதைப் போலவே ஆலய விஷயங்களில் சுவதந்திரம் மற்றும் பரதந்திரம் என இருவகை உண்டு .
ஆலயத்தின் முதல் பகுதி, பின்னர் ஊரை உண்டாகுதல், என்னும் கட்டுமானம் "சுவதந்திரம்" எனப்படும் .
ஊரை முதலில் உண்டாகி, பின்னர் ஆலயத்தை நிறுவினால்,
"பரதந்திரம்" எனப்படும் .
http://kalyanasundaram-sthapati.business.site/https://www.indiamart.com/srinidhi-temple-architects/
கட்டடத்தின் அமைப்பு பற்றி , " புருஷோத்தம சம்ஹிதை"யில், நாகர, திராவிட, வ்ருத்த ,வ் விருத்தாந்தம் என்னும் நான்கு வகை
விமானங்களைக் குறிப்பிட்டு, அவற்றின் விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
விமானங்களை பற்றிக் குறிப்பிடும்போது ,
" ப்ரபேத மதுனா வக்ஷே
விமானானாம் ஸலக்ஷணம் |
அனந்தி யாத் தந்த்ர பேதானாம்
கின்சிதேவ ப்ரதர்சயேத் ||"
என்று துவங்கி வைஜெயந்தி, விசாலா, புஷ்பகம், கேசரம், ஸ்வஸ்திகம், பர்வத, மந்திரம், ஸ்வஸ்தி, பந்தம்,கல்யாண, பாஞ்சாலம்,விஷ்ணு க்ராந்தம், சுமங்கலம், காந்தாரா, புஸ்கரம், மனோஹரம், கௌபேரம், பத்ர கேஷ்ட்ட, வ்ருதகோடி, கோஷ்டபத்ர, ஸ்ரீபோகம், லம்பயம்சம், ஜெயாவஹம், நந்திகம், சௌபத்ரம், கமலமண்டலம் , இந்துபத்ரம் , தவளகாந்தம் , சௌம்யம், லலிதபத்ரம், வ்யாஸாக்யம், சைலைஸ்கந்தம், மத்யபத்ரம், ஸ்ரீயஸ்கந்தம், யோகாநந்தம், ஹம்ஸதாரகம், மஹேந்த்ரகம், சூர்யகாந்தம், மங்கலாஸ்வதம் , உதாரஸாரம், விஜய, அமலாங்கம், விமலாக்ருதி, ஸ்ரீதரம், சந்தரகாந்தம், ஸ்ரீ ப்ரதிஷ்டிக்கம், மற்றும் சுதஸ்வஸ்திக என்று பலவகைப்பட்ட விமானங்கள் பற்றிச் சொல்லப்பட்டுள்ளன.
"விமானம் விஷ்ணுரூபம் சியா ந்நாதத் பாதாதி நாக்ரமாத்"
என்று விமானம் தேவ வடிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது .
பிராகாரங்களின் நான்கு திசையிலும் திசைகளிலும், நான்கு கோபுரங்களின் அமைப்புப் பற்றியும் கூறப்பட்டுள்ளது. எந்த ஆலயத்திற்கு , கோபுரங்கள் இல்லையோ அந்த ஆலயங்கள் சிறப்புடையனல்ல. அதே போல் கருவறை மேலிருக்கும் கட்டட அமைப்புக்கு விமானம் என்று பெயர் . எங்கு கோபுரமும் விமானமும் இல்லையோ, அங்கு யதிகள் அல்லது துறவிகள், அரசர்கள் தரிசனம் செய்யக்கூடாது என்னும் வழக்கம் நம்முள் வளர்ந்துள்ளது.
"ஊரின் கிழக்கு, வடக்கு, வடகிழக்கு அல்லது ஊரில் அனைவருக்கும் வசதியாக உள்ள இடத்தில் ஆலயத்தை நிறுவுக " என சைவாகமம் குறிப்பிடுகிறது.
முதன் முதலில் தண்ணீர் வசதியைக் கவனிக்க வேண்டும் என வைகானஸம் குறிப்பிடுகிறது . மலை, குன்று, நதிக்கரை இவை ஆலயம் நிருவச் சிறந்த இடங்களாகும். ஆலயம் சதுரமாகவும், முக்கோணமாகவும் , அறுகோணமாகவும் , விட்டம் முதலிய வடிவங்களில் அமைக்கப்படலாம் எனப் பாஞ்சராத்ர ஆகமம் குறிப்பிடுகிறது . ஆலயம் சதுரமான அமைப்பே மிகச்சிறந்ததென, 'ப்ருஹத்சம்ஹிதையில்' சொல்லப்பட்டுள்ளது .
http://kalyanasundaram-sthapati.business.site/
' உத்யானம் புஷ்ப வாடிம்ச பரிதோ தாம கல்பயேத்"
உத்தியான வனங்கள், பூந்தோட்டங்கள், ஆலயத்தைச் சுற்றி அமைத்தல் வேண்டும். சூழ்நிலையை உணராமல் ஆலய நிர்மாணம் செய்யலாகாது . மற்றும் பிராகாரங்களின் வெளிப்புறத்தில்,
"சாஸ்த்ர ச்ரவணயுக் தானாம் வேதாத்யயன சாலினாம் ,
யதீனாம் இதரே ஷாம்ச்ச மடம் காரயித் பஹி :||
சாத்திரப்பாடம், வேதபாடசாலை, மற்றும் துறவிகளுக்கு மடம் இவற்றைகட்டுவித்தல் வேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது .
பிரகாரம் அல்லது சுற்றுச் சுவருக்குள், எந்தெந்த மண்டபங்கள் இருக்கவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளன .
புஷ்பமண்டபம், க்ரீடா மண்டபம் , உத்யான மண்டபம், கருடா ரோஹண மண்டபம், கஜ ரோஹன மண்டபம், அச்வாரோஹண மண்டபம், ரத மண்டபம், நாட்டிய மண்டபம், கீதா மண்டபம், சயன மண்டபம், டோலா ரோஹன மண்டபம், வாத்திய மண்டபம், ஸ்நபன மண்டபம் , அங்குரார்ப்பண மண்டபம், அதிவாஸ மண்டபம்,சஸ்த்ரசாலா மண்டபம், யாக சாலா மண்டபம், முக மண்டபம், பசன மண்டபம் இவ்வாறு பற்பல சேவைகளுக்கான மண்டபங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன .
ஆலயங்களை எங்கு நிறுவுதல் வேண்டும் என்பது பற்றி விஷ்ணு தர்மோத்திரத்தில் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது ;
நதிக்கரைகள், காடுகள், உபவனங்கள், கடற்கரை, மலை மற்றும் குன்றுகள் என்று குறிப்பிட்டு ஓர் எச்சரிக்கையும் செய்யப்பட்டுள்ளது ,
ஜலா சய விஹீநேஷூ தேசேஷு மனுஜோத்தம |
ஷட்த்ரவ்யாணீ ப்ரக்ருதயே யன்மயா: ப்ரதிமா: ஸ்ம்ருதா: ||
தண்ணீரில்லாத இடத்தில், ஆலயத்தை நிறுவினால் அந்த ஆலயத்தில் இறைவன் நிலைப்பது இல்லை . அது ' தேவனில்லாத கோயிலாகவே நின்றுவிடும்' என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுகின்றன .
http://kalyanasundaram-sthapati.business.site/
13.காரணம், 14.விஜயம்,15, விமலம், 16.சர்வம், 17.அஜிதம், 18.நிச்வாசம் ,
19. சந்திர ஞானம் 20.பாரமேஸ்வரம் .21 தீப்தம், 22.ஸ்வாயம்புவம்,
23.பிம்பம், 24.கிரணம், 25.சூக்ஷ்மம், 26.அனலம், 27.ப்ரொத்கீதம் 28.வாதுளம் .
"ஈஸ்வர சம்ஹிதை " 24 வது அத்தியாயங்களில் 16 அத்தியாயங்கள் இந்த விதிகளை பற்றியே குறிப்பிடப்பட்டுள்ளன . "ஹயசீர்ஷ சம்ஹிதையில்" முதல் காண்டமே பிரதிஷ்டா காண்டம். இது 42 பிரிவுகளை கொண்டது. " பௌஷ்காரணசம்ஹிதை" யின் முக்கியமான பகுதி மூர்த்தி வழிபாட்டினைப் பற்றியே உள்ளது.
ஆலய நிர்மாணத்தில் முக்கியமான ஐந்து வகைகள் உண்டு .
1. சதுரஸ்ரம்
2. ஆயதாஸ்ரம்
3. வ்ருத்தாயதம்
4. வ்ருத்தம்
5.அஸ்ட்டாச்ரம்
இதைப் போலவே ஆலய விஷயங்களில் சுவதந்திரம் மற்றும் பரதந்திரம் என இருவகை உண்டு .
ஆலயத்தின் முதல் பகுதி, பின்னர் ஊரை உண்டாகுதல், என்னும் கட்டுமானம் "சுவதந்திரம்" எனப்படும் .
ஊரை முதலில் உண்டாகி, பின்னர் ஆலயத்தை நிறுவினால்,
"பரதந்திரம்" எனப்படும் .
கபிஞ்சல சம்ஹிதையில் ஆலயத்தை நிறுவுதல் பற்றி
இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது .
உத்தமம் து சிலா வெச்ம
மத்திமம் சேஷ்டகா பவேத் |
அதமம் தாரு ஜம் வித்யான்
ம்ருதா த்யைஹி க்ஷுத்ர முச்யதே ||
உத்தமமானது கல் ;, மத்திமம் செங்கல்; , அதமம் மரப்பலகை.
இவ்வாறு முதன்மையானது , இடைப்பட்டது , கடைப்பட்டது என கட்டடங்களுக்குப் பயன்படுத்தும் பொருட்கள் பற்றிய விவரங்கள் சொல்லப்பட்டுள்ளன .