Saturday, 7 October 2017

சிற்பி

                                  

                                               சிற்பி 

             சிற்பியின்  பங்கு 

                    அந்தர் பாஹிஸ்ச்ச   தத்ஸர்வம்  
                             வ்யாப்ய     நாராயண  ஸ்தித :  
               இந்த   உருவத்திற்கு   அடிப்டையானவனே  சிற்பி . கல் , மண் , உலோகம் என  எந்த பொருளை  கொடுத்தாலும்,  மற்றும்  குப்பையிலும்  குண்டுமணியை  வெளிப்படுத்துவான்  சிற்பி . இவன்  சாமான்யமானவன்  அல்ல .
     அர்ச்சகரை  போலவே, " ப்ரஸூத்ர  சாஸ்த்ர  க்ரியா ,  யக்ஞ  மந்த்ர, தந்த்ரார்த்த  கோவித:  என்று  மயசாஸ்திரத்தின்  13 வது   அத்தியாயத்தில்  சொல்லப்பட்டுள்ளது.மற்றும் விஸ்வகர்ம குல வழக்கத்தை, அறிந்த   வனாகவும்  அவன்  இருக்க வேண்டும்   மற்றும்  பரம்பரையாகவும்  இந்த கலையைப்   பயின்று  வருதல்  வேண்டும். சந்தியாவந்தனம் ,ஜபம், வேதப்பயிற்சி  இவற்றை  உடையவனாகவும் இருத்தல்வேண்டும்.  குருவின்  வழியாக    தீட்சை   பெற்றவனே    சிற்பி.    கலைநுட்பம்     தேர்ந்த      இந்தச்  சிற்பியின்  ,

            ஹ்ருதயம்  ப்ரம்ஹ , சந்த்ர  சூர்யௌச   சக்ஷுஷி |
            ஹஸ்தௌ   ஹரிஹர, சைவ  ஸர்வாங்கம்  சர்வ தேவதா: ||

     இதயமே   பிரம்மா ;  சந்திரசூர்யர்களே  அவன் கண்கள்;  இரு கரங்களும்  ஹரியும்  ஹரனுமாம். பிற அங்கங்களில்  அனைத்து  தேவதைகளும்  குடி  கொண்டுள்ளனர் .

            எனவே  விஸ்வகர்மாக்களை  கொண்டு  மூர்த்திகளை அல்லது  சிற்பங்களைச்   செய்வது  சிறப்பாகும்.  அது மட்டுமின்றி  முதலில் சிற்பி  தேவப்ரதிஷ்டை சடங்கினை  முடித்த பின்னரே  ப்ராமணருக்கும்   அதன்பால்  அதிகாரம்  உண்டு .
                           
                              " பூர்வம்  சில்பி:  ப்ரதிஷ்டாப்ய 
                              த்விதீ  யா      ப்ராமணாக்ருதி "
   

         நாரதீய  சம்ஹிதையில்   சிற்பிக்கு  ஒரு குறிப்பு  தரப்பட்டுள்ளது. 
விக்ரஹங்கள்    பால   வடிவமோ, அல்லது  யௌவன   வடிவமோ  கொண்டதாக  இருத்தல்  வேண்டும் . முதுமை தோற்றம்   கொண்டதாக  இருத்தல்  கூடாது   என்று  எச்சரிக்கப்பட்டுள்ளது.

               சிற்பியை  உரிய   முறையில்  கௌரவிக்க  வேண்டும். அது  எவ்வாறு ? 


                              தேனூர்க       துரங்காஸ்ச்ச 
                              பலக்யாம்       தோளிகம்  ததா |
                             கன்யா: க்ஷேத்ராணி     க்ராமஸ்ச்ச  
                             சாத்ர    சாமர   ஸம்யுதம்  ||
                             ஸமஸ்தாபரணம்     சாபி 
                             சில்பினாம்  த்ருப்தி  போஜனம்  |  

   
      ஸ்ரீ ப்ரச்ன   சம்ஹிதையில்   இறை சாந்நித்யத்திற்கு  மூன்று  காரணங்கள்  சொல்லப்பட்டுள்ளன .

                    1. நிறைவாக  அல்லது  பூர்ணமாக  மந்திரம் அறிந்த  அர்ச்சகர் 

                    2.முழுமையான  கலைநுட்பம்  தேர்ந்த  சிற்பி 

                   3. நிரப்ப  செல்வமுள்ள  யஜமானன் ( ஆலயத்தை கட்டுபவர் )

    இவற்றில்  சிற்பியின்  பங்கு  மட்டுமே  மிகமிக உயர்ந்த   இடத்தை  பற்றியுள்ளது  என்பது  நன்கு புலப்படும் .

                சிற்பியை  புறக்கணிக்கவேண்டாம்

          சில்பி பூஜா          சிலாபூஜா    சில்பிது கேன து : கிதா |
          சில்பினா   கல்பிதம்  தைவசில்பி  ப்ரம்மமயம்  ஜகத் ||  

         கல்லை குடைந்து  அதனை  தெய்வ விரஹமாகக்  செய்பவன்  சில்பி . அவன்  வருத்தப்பட்டால்  தெய்வமும்  துன்புறும் . எனவே  சிற்பியினை 
கௌரவிக்க   வேண்டும்.






















No comments:

Post a Comment

WHO IS STHAPATHI

                   WHO IS  STHAPATHI The architect of the Temple was not only a master of the 'ocean of the science of architecture...