Saturday, 7 October 2017

கோபுர கட்டடக்கலை

         கோபுர கட்டடக்கலை 

          தமிழகத்தில்   மிக பழமையான  கோபுரங்கள் 

                              தமிழகத்தில்   இன்று  திகழும் கட்டுமான  கோயில்களின்   வரிசையில்  மிகப்  பழமையான  கோபுரவாயிலுடைய  திருக்கோயிலாகத்  திகழ்வது   காஞ்சிபுரம்   கைலாசநாதர்  திருக்கோயிலாகும்.    அது  போன்றே     மாமல்லபுரம்  கடற்கரைக்   கோயிலுமாகும் . இவ்விரு  கோயில்களும்
 இராஜசிம்மன்     எனும்   பல்லவப்  பேரரசனால்  கட்டப்பெற்றவையாகும்.   மாமல்லபுரம்  கடற்கரை கோயிலின் மேற்குக்  கோபுரம்அழிந்துவிட்டாலும்
 கிழக்குப்புறம்   கடலை  ஒட்டிய  மதிலின்  வாயிலில்  சிறிய தோரணவாயில்   போன்ற  கோபுர அமைப்பு காணப்படுகிறது .காஞ்சிபுரம்  கைலாசநாதர்   கோயில் கோபுரம் ஒரே  நிலையுடன் மிக சிறிய  கோபுரமாக  காணப்படுகிறது .அதிஷ்டானத்தில்  தொடங்கி  சிகரம்  வரை கோபுரத்திற்கான  அங்கங்கள்   இருப்பினும்  சாலை,  கூடு  போன்ற  உறுப்புகள்   இல்லை.

http://kalyanasundaram-sthapati.business.site/

                          பல்லவர்  காலத்தில்  குறிப்பாக  இராஜசிம்ம பல்லவன்  காலத்தில்  வளர்ச்சி  எய்தத்  தொடங்கிய  கோபுரக் கட்டட கலை,  சோழப்பேரரசர்கள்  காலத்தில்  கோயிற்கட்டடக்கலையில்  ஒரு  முக்கிய  இடத்தை  பெறலாயிற்று.  ஆதித்தன்  பராந்தகன்  போன்ற  பேரரசர்கள்   காலத்தில் எடுக்கப்பெற்ற   கோபுரங்களைப்   பின்னாளில்  பலர்  புதுப்பித்ததால்  அவர்கள் படைப்புகளின்  முழு எழிலையும்  குறைவு படாமல்  பார்க்க  இயலவில்லை.   திருவாரூர் திருக்கோயிலின்   புற்றிடங்கொண்ட  ஈசனின்  திருக்கோயில்  முன்பு  திகழும் சிறிய  கோபுரம்  முற்காலச்  சோழர்படைப்புக்கு  சிறந்த சான்றாகும் .   இருப்பினும்   அதன்  மேல்  தளங்கள்   பலமுறை  திருப்பணிகளுக்கு  உள்ளாமையினால்  பழமையான  வடிவம்   மாறுபட்டு உள்ளது .  மூன்று  நிலைகளோடு  திகழ்ந்த  முற்காலச்  சோழர்களின்  கோபுரங்கள் மாமன்னன்  இராஜராஜன்  காலத்தில்தான்  புதிய  வளர்ச்சி  நிலையை  எய்தியது.    தஞ்சைப்  பெருகோயிலின்  வாயில்களான   கேரளாந்தகன் திருவாயில்,  இராஜராஜன்   திருவாயில்  எனும்  இரண்டு  கோபுரங்கள்  தான்  தமிழகக்   கோபுரக்கலை   வரலாற்றில்  ஒரு  புதிய  பரிணாம  வளர்ச்சியைத்  தோற்றுவித்தன. ஆயிரம்  ஆண்டுகளுக்கு  முன்பு  தமிழகத்தில்   திகழ்ந்த   மிகப்பெரிய   கோபுரங்கள்  இவைதான்  என்பது   குறிப்பிடத்தக்கது.     





                           தமிழகத்தில்  கி.பி. எட்டாம்  நூற்றாண்டில்  தொடக்கம் பெற்ற   கோயிற்  கோபுரக்கட்டடக்கலை     கி.பி. ஆயிரமாவது  ஆண்டில்  ஒரு  உன்னத  நிலையைத்  தொட்டது . அதன் பிறகு  அக்கட்டடக்கலை  பல்வேறு  பரிமாணங்களில்  வளர்ச்சி  பெறலாயிற்று.  சிற்ப ஆகம நூல்கள்  அக்கட்டடக்கலை  வளர்ச்சிக்குப்   பெரிதும் வழிவகுத்தன . சிற்ப மற்றும்  கட்டடக்கலை  வல்லுனர்களின்  திறமை,  கற்பனை   ஆகியவைகளுக்கேற்பக்   கோபுரங்களின்  வடிவமைப்பில்  மாற்றங்கள்  ஏற்பட்டன.  ஏறத்தாழ  அறுநூறு   ஆண்டுகளுக்கு   மேலாகப்   பல்வேறு மாற்றங்களையும் ,  செறிவையும்  கண்ட  அக்கலை  பின்னர்   ஆக்கம்  தருவோர்  இன்மையால்  தொய்வு  நிலை  எய்தியது . அக்காலக்கட்டதிற்கு   பின்பு  புதுப்பிக்கப்   பட்ட    பழைய  கோபுரங்களும்    அக்கலையின்  சிறப்புகளை  வெளிக்  காட்டுபவையாக   அமையாமல் , கட்டுமான  நுட்பங்களைப்   பொறுத்தவரை  பின்னடைவையே  காட்டுகின்றனவாக   விளங்குகின்றன .    


                மேலும்   கோபுரக்கலை  பற்றிப்   பேசும்   நூல்கள், அவை கூறும்  தொழில்  நுட்பங்கள்,  இராஜராஜசோழன்  காலத்துத்,  தில்லை கோபுர  அமைப்பு, கல்ஹாரமின்றி   முழுதும்  செங்கல்லாலேயே  எடுக்கப்  பெற்ற   கோபுரங்கள்,   அவற்றிற்குரிய  தொழில்  நுட்பங்கள்,  கோபுரத்   திருப்பணிகள்  ஆகியவை  பற்றி  விரிவாக  இங்கு  பார்போம் .       

     1.  கோபுரக்  கட்டுமானம் 
                    
                    கோபுர   கட்டுமானம்  என்பது  மூன்று  அடிப்படைக்   கூறுகளை  மையமாகக்  கொண்டதாகும் .

                             1. காப்பு  அல்லது  உறுதி  தன்மை (ரஷா)  ( STABILITY)
                             2. உயரம் (HEIGHT)
                             3. அலங்காரம்   (சோபா)   (DECORATIVE)

    என்பவைகளே   அக்கூறுகளாகும் .  இவை   மூன்றும்   செமையாக   அமைந்த  கோபுரங்களே   சிறந்த  கோபுரங்களாக  பரிணமிக்கின்றன.  
                                       


















No comments:

Post a Comment

WHO IS STHAPATHI

                   WHO IS  STHAPATHI The architect of the Temple was not only a master of the 'ocean of the science of architecture...