KASYAPA SHILPA SASTRA
https://www.indiamart.com/srinidhi-temple-architects/
KASYAPA SHILPA SASTRA
காசியப சில்ப சாஸ்திரம்
1. பூபரீஷா
2.திக்பரிச்சேதனம்
2.திக்பரிச்சேதனம்
3. வாஸ்து பலி
4. ஆத்யேஷ்டிகை (முதலாவது கல் நாட்டும் விதி )
5.பிரதமேஷ்டகா விதி
6. உபபீட விதானம்
7.அதிஷ்டான லக்ஷணம்
8. நாள பிரதிஷ்டா விதி
9. பாதவர்கம் (ஸ்தம்ப லக்ஷணம் )
10.போதிகா லக்ஷணம்
https://www.indiamart.com/srinidhi-temple-architects/
1. பூபரீஷா விதி
தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தில் ஒரு முழம் அகலம், ஒரு முழம் நீளம் ஒரு முழம் ஆழத்திற்கு, பூமியைத் தோண்டி, மண்ணை எடுக்க வேண்டும் . பிறகு , தோண்டி எடுத்த மண்ணை அந்தப்பள்ளத்தில் தள்ளி நிரப்ப வேண்டும் . அப்பொழுது, தோண்டி எடுத்த மண் மீதமிருந்தால், அந்த பூமியானது உத்தமமான பூமியாகும். குழிநிரம்பி, மண் மீதமில்லாமல் சமமாக இருந்தால், அது மத்திமமான பூயாகும். அந்தக்குழி நிரம்புவதற்குப் போதுமான மண் இல்லாமலிருந்தால் , அது அதம பூமியாகும்.
உத்தமமான பூமியையே, சிறந்ததாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும் , மத்திம பூமியானது மத்திமமாகும் . அதம பூமியை ஒதுக்கிவிடவேண்டும் .
பூமியானது , வெளுப்பு, சிவப்பு, மஞ்சள், கருப்பு, என்று முறையே, நான்கு விதமாகும். இந்த நான்கு விதமான பூமியும், முறையே
பிராம்ஹணாதி ஜாதியினருக்கு சிறந்ததாகும் .
முதலில், பூதங்கள், பிரேதங்கள் , பைசாசங்கள், இவர்களுக்கும் , (வன) தேவதைகளுக்கும் , பலி கொடுக்க வேண்டும்.
அதன் பிறகு , அஸ்திர மந்திரத்தினால் அவைகளை, அந்த இடத்திலிருந்து , உச்சாடனம் செய்யவேண்டும் , (அந்த இடத்தை விட்டுச் செல்லும்படி செய்யவேண்டும் .) பிறகு பூகர்ஷணம் செய்ய ( அந்த பூமியை உழுவதற்கு) துவங்க வேண்டும்.
பூமியானது, வெளுப்பு, சிவப்பு , மஞ்சள், கருப்பு என்று நான்கு விதமாகும். இவைகள் முறையே, நான்கு ஜாதியினருக்கும் , தகுதியுள்ளதாகும் ..
கிழக்கு முகமாகவோ , வடக்கு முகமாகவோ உழவேண்டும். அவ்விடத்திலுள்ள புல் பூண்டுகளை எடுத்துவிட்டு அந்த பூமியில் , எள்ளு, கடுகு,, பயிறு , இவைகளை விதைக்க வேண்டும் .
மூன்று நாட்களில் முளைப்பது உத்தமமாகும் . நான்கு நாட்களில்
முளைப்பது அத்தமமாகும். (மூன்று நாட்களில், விதைத்த விதைகளில் முளை கண்டால் , அது உத்தமமான பூமியாகும் , நான்கு நாட்களில் முளை கண்டால் அது மத்திம பூமியாகும். ஐந்து நாட்களில் முளை கண்டால் அது அதம பூமியாகும், என்பது பொருள் ) எனவே அதமமான பூமியை விலகிவிட வேண்டும்.
பிறகு அதில் திக்பரிச்சேதனம் செய்யவேண்டும்
No comments:
Post a Comment