Wednesday, 15 November 2017

S.B.KALYANASUNDARAM STHAPATHI சிற்ப சாஸ்திரம்

                  சிற்ப சாஸ்திரம் 

                 மயமதம் , காஸ்யபம் , மானசாரம்  போன்ற  நூல்கள்  கோயில்  கட்டடக்கலையை  பற்றி  விரிவாக  பேசுகின்றன .  கோயில்  கட்டத்  தேர்வு    செய்யப்பெறும்   நிலத்தில்  தொடங்கிக்  கட்டுமானம்  நிறைவு பெறும்வரை உள்ள  அம்சங்களையும்   விளக்குகின்றன . கட்டுமான தொடக்கத்திலிருந்து   பின்பு  நித்ய    நித்திய வழிபாடுவரை    கடை பிடிக்க  வேண்டிய  விதி  முறைகள் அனைத்தையும்  கீழ்காணும்  பட்டியலில்  உள்ள  இருபத்தெட்டு   சைவாகமங்களும்  அவற்றின்  உபாகமங்களும் தெளிவாக  விளக்குகின்றன. 
               
                                                           சிவாகமங்கள்
   1.காமிகம் ,2. சஹஸ்ரம் 3. வீரம்  , 4.லலிதம் ,5. யோகஜம் 6.அம்சுமான் ,       7. ரௌரவம் , 8. சித்தம் , 9.சிந்தியம், 10. சுப்ரபேதம், 11. மகுடம், 12.சந்தானம்,
13.காரணம், 14.விஜயம்,15, விமலம்,  16.சர்வம், 17.அஜிதம்,  18.நிச்வாசம் , 
19. சந்திர ஞானம்  20.பாரமேஸ்வரம் .21 தீப்தம், 22.ஸ்வாயம்புவம், 
23.பிம்பம், 24.கிரணம், 25.சூக்ஷ்மம்,  26.அனலம், 27.ப்ரொத்கீதம் 28.வாதுளம் .        

                   "ஈஸ்வர  சம்ஹிதை " 24 வது  அத்தியாயங்களில்  16 அத்தியாயங்கள்  இந்த  விதிகளை பற்றியே  குறிப்பிடப்பட்டுள்ளன . "ஹயசீர்ஷ சம்ஹிதையில்"  முதல்  காண்டமே  பிரதிஷ்டா  காண்டம். இது  42 பிரிவுகளை  கொண்டது. " பௌஷ்காரணசம்ஹிதை"    யின் முக்கியமான  பகுதி  மூர்த்தி வழிபாட்டினைப்  பற்றியே உள்ளது.

         ஆலய  நிர்மாணத்தில்  முக்கியமான  ஐந்து   வகைகள்  உண்டு .
                                1. சதுரஸ்ரம் 
                                2. ஆயதாஸ்ரம் 
                                3.  வ்ருத்தாயதம் 
                                4. வ்ருத்தம்   
                                5.அஸ்ட்டாச்ரம் 

                  இதைப்  போலவே  ஆலய  விஷயங்களில்  சுவதந்திரம்  மற்றும்  பரதந்திரம்   என இருவகை  உண்டு .
     ஆலயத்தின்   முதல் பகுதி,   பின்னர்  ஊரை  உண்டாகுதல், என்னும்  கட்டுமானம்   "சுவதந்திரம்"   எனப்படும் .
     ஊரை  முதலில் உண்டாகி,    பின்னர்  ஆலயத்தை  நிறுவினால், 
"பரதந்திரம்" எனப்படும் .
                    கபிஞ்சல    சம்ஹிதையில்  ஆலயத்தை  நிறுவுதல்  பற்றி  
இவ்வாறு    சொல்லப்பட்டுள்ளது .

                     உத்தமம்  து  சிலா  வெச்ம 
                     மத்திமம்  சேஷ்டகா   பவேத் |
                     அதமம்  தாரு  ஜம்   வித்யான் 
                     ம்ருதா   த்யைஹி    க்ஷுத்ர  முச்யதே ||
    
             உத்தமமானது   கல் ;,   மத்திமம்  செங்கல்; ,   அதமம்  மரப்பலகை.
 இவ்வாறு  முதன்மையானது , இடைப்பட்டது , கடைப்பட்டது   என  கட்டடங்களுக்குப்    பயன்படுத்தும்  பொருட்கள்  பற்றிய விவரங்கள்  சொல்லப்பட்டுள்ளன .  
http://kalyanasundaram-sthapati.business.site/https://www.indiamart.com/srinidhi-temple-architects/ 


           கட்டடத்தின்   அமைப்பு பற்றி ,   " புருஷோத்தம  சம்ஹிதை"யில், நாகர, திராவிட, வ்ருத்த ,வ்   விருத்தாந்தம்   என்னும்  நான்கு  வகை  
விமானங்களைக்    குறிப்பிட்டு,      அவற்றின்          விவரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.    

         விமானங்களை  பற்றிக்    குறிப்பிடும்போது , 

                                       " ப்ரபேத       மதுனா      வக்ஷே   
                                          விமானானாம்  ஸலக்ஷணம் |
                                          அனந்தி  யாத்   தந்த்ர   பேதானாம் 
                                          கின்சிதேவ    ப்ரதர்சயேத் ||"


                      என்று  துவங்கி  வைஜெயந்தி,  விசாலா, புஷ்பகம், கேசரம், ஸ்வஸ்திகம், பர்வத, மந்திரம், ஸ்வஸ்தி, பந்தம்,கல்யாண, பாஞ்சாலம்,விஷ்ணு க்ராந்தம், சுமங்கலம், காந்தாரா, புஸ்கரம், மனோஹரம், கௌபேரம், பத்ர  கேஷ்ட்ட,   வ்ருதகோடி,  கோஷ்டபத்ர, ஸ்ரீபோகம், லம்பயம்சம், ஜெயாவஹம்,  நந்திகம்,  சௌபத்ரம், கமலமண்டலம் ,   இந்துபத்ரம் ,  தவளகாந்தம் ,   சௌம்யம், லலிதபத்ரம்,  வ்யாஸாக்யம், சைலைஸ்கந்தம், மத்யபத்ரம், ஸ்ரீயஸ்கந்தம்,    யோகாநந்தம், ஹம்ஸதாரகம், மஹேந்த்ரகம், சூர்யகாந்தம், மங்கலாஸ்வதம் ,     உதாரஸாரம், விஜய, அமலாங்கம், விமலாக்ருதி, ஸ்ரீதரம், சந்தரகாந்தம், ஸ்ரீ ப்ரதிஷ்டிக்கம், மற்றும்  சுதஸ்வஸ்திக  என்று பலவகைப்பட்ட விமானங்கள் பற்றிச்  சொல்லப்பட்டுள்ளன.     

               "விமானம்  விஷ்ணுரூபம்  சியா ந்நாதத்  பாதாதி  நாக்ரமாத்" 
     
என்று   விமானம் தேவ வடிவாகக்   குறிப்பிடப்பட்டுள்ளது .

        பிராகாரங்களின்   நான்கு  திசையிலும்  திசைகளிலும்,  நான்கு  கோபுரங்களின்   அமைப்புப்  பற்றியும்   கூறப்பட்டுள்ளது.  எந்த ஆலயத்திற்கு ,  கோபுரங்கள்  இல்லையோ  அந்த  ஆலயங்கள்     சிறப்புடையனல்ல.   அதே  போல்   கருவறை  மேலிருக்கும்  கட்டட  அமைப்புக்கு   விமானம்   என்று  பெயர் .   எங்கு  கோபுரமும்  விமானமும்  இல்லையோ,  அங்கு  யதிகள்   அல்லது  துறவிகள்,  அரசர்கள் தரிசனம்  செய்யக்கூடாது  என்னும்  வழக்கம்  நம்முள்  வளர்ந்துள்ளது.   
                                        
                       "ஊரின்   கிழக்கு, வடக்கு,  வடகிழக்கு  அல்லது  ஊரில்  அனைவருக்கும்  வசதியாக  உள்ள  இடத்தில்  ஆலயத்தை   நிறுவுக "  என  சைவாகமம்  குறிப்பிடுகிறது.

          முதன்  முதலில்   தண்ணீர்  வசதியைக்  கவனிக்க வேண்டும்   என    வைகானஸம்  குறிப்பிடுகிறது . மலை, குன்று, நதிக்கரை  இவை  ஆலயம்   நிருவச்    சிறந்த    இடங்களாகும்.     ஆலயம்            சதுரமாகவும்,  முக்கோணமாகவும் ,     அறுகோணமாகவும் ,  விட்டம்  முதலிய  வடிவங்களில்  அமைக்கப்படலாம்   எனப்  பாஞ்சராத்ர  ஆகமம்  குறிப்பிடுகிறது .  ஆலயம்  சதுரமான   அமைப்பே  மிகச்சிறந்ததென,   'ப்ருஹத்சம்ஹிதையில்' சொல்லப்பட்டுள்ளது .      
http://kalyanasundaram-sthapati.business.site/

                                          ' உத்யானம்  புஷ்ப  வாடிம்ச   பரிதோ    தாம   கல்பயேத்"

        உத்தியான   வனங்கள்,  பூந்தோட்டங்கள்,  ஆலயத்தைச்  சுற்றி  அமைத்தல்  வேண்டும்.  சூழ்நிலையை  உணராமல்   ஆலய நிர்மாணம்  செய்யலாகாது .   மற்றும்  பிராகாரங்களின்    வெளிப்புறத்தில், 

              "சாஸ்த்ர  ச்ரவணயுக்   தானாம்   வேதாத்யயன  சாலினாம் ,
                யதீனாம்   இதரே   ஷாம்ச்ச  மடம்   காரயித்   பஹி :||

    சாத்திரப்பாடம்,   வேதபாடசாலை,  மற்றும்  துறவிகளுக்கு  மடம்   இவற்றைகட்டுவித்தல்   வேண்டும்  என்றும் சொல்லப்பட்டுள்ளது .

                 பிரகாரம்    அல்லது   சுற்றுச்  சுவருக்குள்,  எந்தெந்த  மண்டபங்கள்  இருக்கவேண்டும்  எனவும்   குறிப்பிடப்பட்டுள்ளன . 

                புஷ்பமண்டபம், க்ரீடா   மண்டபம் ,  உத்யான மண்டபம், கருடா  ரோஹண  மண்டபம், கஜ ரோஹன  மண்டபம்,  அச்வாரோஹண மண்டபம், ரத  மண்டபம், நாட்டிய மண்டபம், கீதா மண்டபம்,  சயன மண்டபம், டோலா  ரோஹன  மண்டபம்,  வாத்திய மண்டபம், ஸ்நபன மண்டபம் , அங்குரார்ப்பண மண்டபம், அதிவாஸ   மண்டபம்,சஸ்த்ரசாலா மண்டபம்,  யாக சாலா மண்டபம், முக மண்டபம், பசன  மண்டபம்  இவ்வாறு  பற்பல  சேவைகளுக்கான  மண்டபங்கள் குறிப்பிடப்  பட்டுள்ளன .
        ஆலயங்களை  எங்கு  நிறுவுதல்  வேண்டும்   என்பது பற்றி விஷ்ணு  தர்மோத்திரத்தில்  இவ்வாறு  சொல்லப்பட்டுள்ளது ;
    
    நதிக்கரைகள்,  காடுகள், உபவனங்கள், கடற்கரை, மலை மற்றும்  குன்றுகள்  என்று  குறிப்பிட்டு  ஓர்  எச்சரிக்கையும்  செய்யப்பட்டுள்ளது ,

       ஜலா   சய   விஹீநேஷூ   தேசேஷு  மனுஜோத்தம |
     ஷட்த்ரவ்யாணீ   ப்ரக்ருதயே  யன்மயா:   ப்ரதிமா:  ஸ்ம்ருதா: ||

             தண்ணீரில்லாத  இடத்தில்,  ஆலயத்தை  நிறுவினால்  அந்த  ஆலயத்தில்  இறைவன் நிலைப்பது  இல்லை . அது  ' தேவனில்லாத   கோயிலாகவே   நின்றுவிடும்'  என்று  சாஸ்திரங்கள்  குறிப்பிடுகின்றன .
http://kalyanasundaram-sthapati.business.site/

WHO IS STHAPATHI

                   WHO IS  STHAPATHI The architect of the Temple was not only a master of the 'ocean of the science of architecture...